விஜயகாந்த் மறைவு - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவு - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
Published on

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com