தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விஜயகுமார் நியமனம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமார், அருண் ராய்
விஜயகுமார், அருண் ராய்
Published on

சென்னை,

தலைமைச் செயலாளர் சாய்குமார், வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நில சீர்திருத்தங்கள் ஆணையர் எஸ்.விஜயகுமார், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் செயலாளர் அருண்ராய், உயர் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் முன்னாள் செயலாளர் சுப்பையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக மாற்றப்படுகிறார்.

சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா, டெல்லியில் தமிழ்நாடு உறைவிட தலைமை ஆணையராக நியமிக்கப்படுகிறார். முன்னாள் முதல்-அமைச்சரின் முன்னாள் செயலாளர்-2 சண்முகம், சுற்றுலா ஆணையராக மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.சேலம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அலுவல் சாரா கூடுதல் செயலாளராகவும் மாற்றப்படுகிறார்.

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டர் இளம்பகவத், சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் பிருந்தாதேவி, கலை மற்றும் கலாசார இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் முதல்-அமைச்சரின் முன்னாள் செயலாளர்-1 உமாநாத். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com