இன்று பா.ஜ.கவில் இணையும் விஜயதாரணி..?

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பா.ஜ.கவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பா.ஜ.கவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து பா.ஜ.க. வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்துக்குப் பிறகு அமித்ஷா முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.கவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com