விஜய்யின் அணுகுமுறை அரசியல் நாகரிக முதிர்ச்சிக்கு அடையாளம்: திருமாவளவன்

முன்னாள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் இன்று சந்தித்து பேசினார்.
விஜய்யின் அணுகுமுறை அரசியல் நாகரிக முதிர்ச்சிக்கு அடையாளம்: திருமாவளவன்
Published on

தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும் முதல்வராக பதவியேற்றதும் அவர்களை விஜய் சந்தித்தது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இது தொடர்பாக கூறியிருப்பதவது; முக ஸ்டாலின், உதயநிதி திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல் அமைச்சர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com