விஜய் பரப்புரை: காரைக்குடி பஸ் நிலையம் மூடல்.. மரம், மின்மாற்றிகளை சுற்றி தகர ஷீட்டால் அடைப்பு

மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவை தகர ஷீட்டால் சுற்றப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
விஜய் பரப்புரை: காரைக்குடி பஸ் நிலையம் மூடல்.. மரம், மின்மாற்றிகளை சுற்றி தகர ஷீட்டால் அடைப்பு
Published on

சிவகங்கை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். விஜய் பரப்புரையில் ஈடுபடும் இடங்களில் தவெக தொண்டர்கள் மரங்கள் மற்றும் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் ஏறுகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக மின் மாற்றிகள், மின் கம்பங்கள், ஸ்பீக்கர் பாக்ஸ்கள், மற்றும் சாலையோரங்களில் தகர ஷீட்டால் சுற்றப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். கடும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் பழைய பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com