

சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது;
"விஜய்யிடம் அதிமுக சார்பில் யாரும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நடிகர் விஜய் தனித்து நிற்க விரும்பினால் நிற்கட்டும். ஒருவரும் சேரவில்லை என்றால், அவர் தனித்துதான் போட்டியிட வேண்டும். விஜய்யின் அரசியல் பிரவேசம், களத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
அதிமுகவின் ஓட்டு வங்கி குறையாது. இரட்டை இலை சின்னத்திற்கு மக்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி, அதிமுகக்கு சாதகமாக மாறும். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும், அதை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் கூறினார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த இழுபறியும் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே, அதிமுக எப்போதும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் அதே அணுகுமுறையை பின்பற்றுகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.