திமுகவில் இருந்து விலகிய..விஜய் முன்னாள் மேனேஜர் பிடி செல்வகுமார் அதிமுகவுக்கு ஆதரவு

திமுகவில் இருந்து விலகிய நிலையில், அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவு அளிப்பதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்
திமுகவில் இருந்து விலகிய..விஜய் முன்னாள் மேனேஜர் பிடி செல்வகுமார் அதிமுகவுக்கு ஆதரவு
Published on

தவெக தலைவர் விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். இவர், கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

இதையடுத்து திமுக மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தனக்கு ஒரு சீட் வழங்கப்படும் என பிடி செல்வகுமார் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், பிடி செல்வகுமார் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், பி.டி செல்வக்குமார் திமுகவில் இருந்து விலகினார். திமுகவில் இருந்து விலகிய நிலையில், அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவு அளிப்பதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com