அலையாத்தி காடுகள் குறித்து விஜய் பேசியது தவறான தகவல் - தமிழக அரசு விளக்கம்


அலையாத்தி காடுகள் குறித்து விஜய் பேசியது தவறான தகவல் - தமிழக அரசு விளக்கம்
x

அலையாத்தி காடுகள் குறித்து விஜய் பேசியது தவறான தகவல் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் | கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்

தவறான தகவல் 1:

“மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மை:

தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால் கடந்த 2021-ம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது. நாகப்பட்டினம் ‌ மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.

தவறான தகவல் 2:

கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.

உண்மை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

தவறான தகவல் 3:

மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?

உண்மை:

சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது. தவறான தகவல்களைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story