விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி கொலை: கைதான ரவுடியின் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது
விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி கொலை: கைதான ரவுடியின் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 படித்து வந்த மாணவி கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். மீண்டும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. 11-ந் தேதி அந்த கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீசுவரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரது வீட்டை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட் டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com