பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

ஆடலூரில் பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தால், மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்
Published on

கன்னிவாடி அருகே உள்ள ஆடலூர் மலைக்கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆடலூர், காந்திபுரம், பூமலை, ஊரடி வளவு, குளவிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற மலைவாழ்மக்கள் பல்வேறு சான்றிதழுக்காக வருகை தருகின்றனர். மேலும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதற்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து பெறுவதற்கு காலை முதல் மாலை வரை காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மலைக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து, அங்கு தினமும் கிராம நிர்வாக அலுவலர் வருகை தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com