கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டார தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். செயலாளர் தனஞ்ஜெயன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com