322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com