கிராம சபை கூட்டம்

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
Published on

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து ராமநாதபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் திரவியக்கனி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அயோத்தியாபுரிபட்டினம், பூலாங்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகளை ஊராட்சி செயலர் காந்திலால் வாசித்தார். புதிய சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கேட்டறிந்தனர். மேலும் ராமநாதபுரம் கிராமம் அருகே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. கூட்டத்தில் ஊர் நாட்டாண்மை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com