கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

அம்பை:

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் அம்பை தாலுகா அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முக சுந்தர பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் ஏ.நாராயணன், செயலர் ஏ.முருகன், பொருளாளர் முஹம்மது ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாராயணன், ரபீக், முருகன் செல்லப்பாண்டியன், மாரியப்பன், சங்கரநாராயணன் கண்டன உரை ஆற்றினார்.

கிராம உதவியாளர்களின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யவும், கிராம உதவியாளர்களை அவதூறாக பேசிய வட்டாட்சியர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com