கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்

பர்கூர் அருகே கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
Published on

பர்கூர்:-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிகரலப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது தண்ணீர் பள்ளம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியில் கற்கள் உடைப்பதாலும், லாரிகள் இயக்கப்படுவதாலும் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்படுகின்றன எனக் கூறி அந்த கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த பர்கூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த குவாரியால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. எங்களது வீடுகளில் வெடிப்பு உண்டாகிறது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த குவாரியை மூடும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com