கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் சாலை மறியல்
Published on

சோழவந்தான், 

சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் 53 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் பணி நடப்பதால் அரசு பஸ் முறையாக இப்பகுதிக்கு வருவதில்லை என கிராம மக்களுக்கு புகார் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக எம்.ஜி.ஆர். நிலையம், கோரிப்பாளையம், பெரியார் நிலையம், வாடிப்பட்டி போன்ற ஊர்களில் இருந்து சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் இருந்து இயக்கக்கூடிய பஸ் எப்பொழுது வரும் என்று அப்பகுதி பயணிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கடந்த மாதம் தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து சில நாட்கள் மட்டும் முறையாக பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் சரியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் குருவித்துறை கிராமத்திற்கு செல்லாமல் சோழவந்தானில் அந்த கிராம பயணிகளை கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மாரியம்மன் கோவில் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com