ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய கிராம மக்கள்

தொடர்ந்து 6 நிமிடம் 30 வினாடிகள் சரவெடிகள் வெடித்ததால் அப்பகுதியே அதிர்ந்தது.

ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய கிராம மக்கள்
Published on: 

கடலூர்,

கடலூர் அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து, ஒன்றரை லட்சம் சரவெடிகளை ஒரே நேரத்தில் வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.

கோதண்டராமபுரம் கிராமத்தில் உள்ள பஜனை மடத் தெருவைச் சேர்ந்த 15 குடும்பத்தினர், தலா 10 ஆயிரம் வாலா சரவெடிகளை(1.5 லட்சம் பட்டாசுகள்) வாங்கியுள்ளனர். அவற்றை ஒன்றாக இணைத்து, சுமார் ஒன்றரை லட்சம் வாலா சரவெடிகளாக உருவாக்கி வெடிக்கச் செய்தனர்.

தொடர்ந்து 6 நிமிடம் 30 வினாடிகள் சரவெடிகள் வெடித்ததால் அப்பகுதியே அதிர்ந்தது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 13 ஆண்டுகளாக இதேபோன்று தீபாவளியைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

X