100 நாள் வேலை வழங்கக்கோரிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு

100 நாள் வேலை வழங்கக்கோரி திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
100 நாள் வேலை வழங்கக்கோரிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு ஊராட்சி 3-வது வார்டு கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்காளாக பணி வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வார்டு உறுப்பினர் பார்த்திபன், பா.ம.க. ஒன்றிய பொருளாளர் கலைச்செல்வி அல்லிமுத்து ஆகியோர் தலைமையில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை 11 மணிக்கு முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் உடனடியாக வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com