தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் ஆர்.கே.பேட்டை-திருத்தணி சாலையில் கிராம மக்கள் மறியல்

ஆர்.கே.பேட்டை அருகே தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் ஆர்.கே.பேட்டை-திருத்தணி சாலையில் கிராம மக்கள் மறியல்
Published on

நடவடிக்கை இல்லை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே செராத்தூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக செய்த மழையில் ஒரு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று ஆர்.கே.பேட்டை-திருத்தணி சாலையில் தங்கள் கிராமம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமரச பேச்சுவார்த்தை

தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகளுடைய கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com