கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தோணுகால் கிராம மக்கள் பா. இன்பராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாடசாமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் நிலங்களுக்கு பெரியகுளம் கண்மாய் வாய்காலில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். தற்போது இந்த நீர்வழி வாய்க்கால் தனிநபர் ஒருவர் நீர்வழி வாய்க்காலை அழித்துள்ளார்.

மேலும், குளத்துக்கும், கிணற்றும் வாய்க்கால் கிடையாது என்று கல்தூண் ஊன்றி, முள்வேலி அமைத்துள்ளார். தற்போது தண்ணீர் கிடைக்காமல் பருத்தி காய்ந்துவிட்டது. எனவே, மாவட்ட அளவையரை கொண்டு எங்களது நிலத்தை அளவீடு செய்து, வாய்க்கால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com