கிராம மக்கள் போராட்டம்; 88 பேர் கைது

சுரண்டை அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 88 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிராம மக்கள் போராட்டம்; 88 பேர் கைது
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 88 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிறிஸ்தவ ஆலயம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் பழமைவாய்ந்த அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியும், அதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ ஆலயமும் இருந்தது. இந்த நிலையில் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு இடநெருக்கடியாக இருந்ததால், பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூட பழைய கட்டிடத்தை இடித்து அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கிராம மக்கள் போராட்டம்

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ''கிறிஸ்தவ ஆலயம் கட்டப்படவுள்ள இடமானது அரசு புறம்போக்கு நிலமாகும். இதன் அருகில் காளியம்மன் கோவில் உள்ளது. அந்த இடத்தில் நூலகம் போன்ற கட்டிடத்தை கட்ட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

உடனே அங்கு வந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் கலைந்து செல்லவில்லை.

88 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அச்சங்குன்றம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com