

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நகை வியாபாரி ராஜமாணிக்கம். இவர் இன்று 2 கிலோ எடைகொண்ட தங்கத்தை பையில் எடுத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்ல புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்ட ராஜமாணிக்கம் மந்தக்கரை கோட்டை விநாயகர் கோவில் அருகே சென்றபோது அவரை பைக்கில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை இடைமறித்துள்ளது.
இதனால் ராஜமாணிக்கம் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது ராஜமாணிக்கத்தை கத்தியை காட்டி மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பல் அவரிடமிருந்த 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நகை வியாபாரி ராஜமாணிக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடியே 40 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.