

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிகள் 9 பேருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறுக்கைபுதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவிக்ரமன் (வயது 59), 5-ம் வகுப்பு மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.