விழுப்புரம்: 8 ரெயில்களின் போக்குவரத்து சேவையில் மாற்றம்!

விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரெயில்களின் போக்குவரத்து சேவையில் மாற்றம்!
Published on: 

விழுப்புரம்,

பொறியியல் பணிகள் காரணமாக 8 ரெயில்களின் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள்

தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்டபல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரெயில்களின் போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66045) வருகிற 16, 18, 21 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66046) வருகிற 16, 18,21 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியள வில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் மதியம் 1.37 மணிக்கு முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

மேலும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப் பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66019) 16, 18, 21 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- சேர்ந்தனூர் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்படும்.

நிறுத்தி இயக்கப்படும் ரெயில்கள்

இதுதவிர சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12635) 16, 18, 21 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங் களும், சார்லப்பள்ளியில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் சார்லப் பள்ளி-திருச்சி சிறப்பு ரெயில் (வண்டி எண் 17077) 17-ந் தேதி வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 60 நிமிடங்களும், ஜோத்பூரில் இருந்து 19-ந் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்படும் ஜோத்பூர்- மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22673) வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 2 மணி நேரமும், சார் லப்பள்ளியிலிருந்து 20-ந் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சார்லப்பள்ளி-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07535) வசதிக்குரிய ரெயில் நிலை யத்தில் 2 மணி நேரம் 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப் படும்.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட வேண் டிய எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127) 16, 18, 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X