விழுப்புரம்: அரசுப் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை

இச்சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம்: அரசுப் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை
மருத்துவர் சரண்யா
Published on: 

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியிலும் சக மருத்துவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் இன்று (வெள்ளிக்கிழமை) அரகண்டநல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மீட்புப் பணிகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆற்றில் தேடுதல் வேட்டை நடத்திய தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை

இச்சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய இந்த விபரீத முடிவுக்கு பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X