விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு


விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு
x
தினத்தந்தி 25 Jan 2026 9:41 AM IST (Updated: 25 Jan 2026 11:23 AM IST)
t-max-icont-min-icon

பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி பாக்கியம் (வயது 45). சம்பவத்தன்று இவர் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக விழுப்புரத்திற்கு பஸ்சில் பயணம் செய்துள்ளார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது அதிலிருந்த ரூ.58 ஆயிரத்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ் பயணத்தின்போது பாக்கியம் வைத்திருந்த பணத்தை யாரோ மர்ம நபர்கள் நைசாக அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story