விழுப்புரம்: 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு

பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

விழுப்புரம்: 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு
Published on

விழுப்புரம்

விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை முன்னிட்டு, 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டிச்சாலை ரெட்டியார்மில் அருகே நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 29.06.2026 முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் அமலில் இருக்கும் நேரம்:

காலை 8 மணி - 10 மணி

மாலை 3 மணி - 5 மணி

மாற்றங்கள்:

• விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் செல்லலாம்.

• புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் இருசக்கர மற்றும் கார் போன்ற சிறிய கனரக வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.

• புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்:

1. கோலியனூர் X ரோடு – ஆழங்கால் – பாணாம்பட்டு – ஹவுசிங் போர்டு (சவிதா தியேட்டர்) ரெயில்வே ஜங்ஷன் வழியாகவோ (அல்லது)

2. கோலியனூர் X ரோடு – ஆழங்கால்- சுந்தரி பாளையம்- ஜானகிபுரம் பைபாஸ் புதிய புறவழிச்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com