விழுப்புரம்: பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்: பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பிளஸ்-1 படித்து வரும் 15 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர். இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com