விநாயகர் சதுர்த்தி நிறைவு: சென்னையில் 5 கடற்கரைப் பகுதிகளில் 139.63 டன் கழிவுகள் அகற்றம்..!

கடந்த 2 நாட்களில் 5 கடற்கரைப் பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
கழிவுகள் அகற்றம்
Published on

சென்னை,

விநாயகர் சதுர்த்தியின் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 5 கடற்கரைப் பகுதிகளில் 19.09.2026 மற்றும் 20.09.2026 ஆகிய 2 நாட்களில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் உப பொருட்கள் என மொத்தம் 139.63 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.

சுத்தம் செய்யும் பணி தீவிரம்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சியில் விநாயகர் சதுர்த்தியின் தொடர்ச்சியாக, இம்மாநகராட்சிப் பகுதியில் உள்ள பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஶ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் கடற்கரை, மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரைப் பகுதிகளில் 19.09.2026 மற்றும் 20.09.2026 ஆகிய 2 நாட்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 19.09.2026 மற்றும் 20.09.2026 ஆகிய 2 நாட்களில் இந்த 5 கடற்கரைப் பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

139.69 டன் திடக்கழிவுகள் அகற்றம்

கடற்கரைச் சுத்தம் செய்யும் இந்தப் பணியில் பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஶ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் கடற்கரை, மற்றும் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரைப் பகுதிகளில் 11,653 விநாயகர் சிலைகள், 84.69 மெட்ரிக் டன் மரக்கழிவுகள், 16.39 மெட்ரிக் டன் பூக்கழிவுகள், 3.65 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள், 1.35 மெட்ரிக் டன் உணவுக் கழிவுகள், 33.55 மெட்ரிக் டன் இதர கழிவுகள் என மொத்தம் 139.69 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.

இதற்காக 13 டிராக்டர்கள், 7 ஜே.சி.பி. வாகனங்கள், 37 டிப்பர் லாரிகள், 26 மின் கள வாகனங்கள், 9 காம்பேக்டர் வாகனங்கள், 3 ஹூக் லோடர் குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது. மேலும், இப்பணியில் 377 தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com