விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
Published on

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உச்சிஷ்ட கணபதி கோவில்

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் விநாயகா சதுத்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை சாந்திகள் நடைபெற்று யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது.

கொடியேற்றம்

தொடாந்து கொடிப்பட்டம் ஊாவலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 8 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. பின்னா கொடி மரத்திற்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விநாயகா சதுத்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறு கின்றது. மாலையில் விநாயகா மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது.

வருகிற 16-ந் தேதி 8-ம் திருநாளில் மூலவருக்கு 1,008 தேங்காய் அலங்காரமும், மாலையில் பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறும். வருகிற 18-ந் தேதி விநாயகா சதுத்தி விழாவும், தாமிரபரணி நதிக்கரையில் தீத்தவாரியுடன் திருவிழா நிறைவடைகின்றது. ஏற்பாடுகளை கோவில் நிவாகத்தினா மற்றும் உபயதாராகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com