விநாயகர் சதுர்த்தி: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்

மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி:  ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில்,

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

* நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

* இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com