

திருச்சி,
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருச்சியில் வருகிற 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் வருகிற 16-ந்தேதி கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும், மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக மீண்டும் நெ.1 டோல் கேட் செல்ல வேண்டும். இதேபோல், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும் சத்திரம் பஸ் நிலையத்துடன் தற்காலி கமாக நிறுத்த வேண்டும்.
திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகர பஸ்களும் தேவைப்பட்டால் மாலை 6 மணிக்குமேல் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். பஞ்சப்பூர் மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பஸ்களும் மாலை 6 மணிக்குமேல் எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை, சாஸ்திரி ரோடு மார்க்கமாக செல்ல வேண்டும்.
மேலும், துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பஸ்களும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டி.வி.எஸ். டோல்கேட் சென்று, மத்திய பஸ் நிலையம் வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்த டத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ் சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழி யாகவும் எந்த விதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.
பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலைகளின் வழி யாக வரும் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவிரி ஆற்றின் இடதுபுறமும், திருவெறும்பூர் சாலை வழியாக வரும் சிலைகள் பாலக்கரை, காந்திமார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுற மும் கரைத்து செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை சாலை வழியாக வரும் சிலைகள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத் ஜங்ஷன். அஞ்சுமன் சாலை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி ஆற்றின் வலதுபுறமும், திண்டுக்கல் சாலை வழியாக வரும் சிலைகள் பொன்னகர், பெரியமிளகுபாறை, கலெக்டர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டனா, எம்.ஜி.ஆர். சிலை, ஸ்டூடன்ஸ் சாலை, சாஸ்திரி ரோடு, கரூர் பைபாஸ் ரோடு,அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், வய லூர் சாலை வழியாக வரும் சிலைகள் புத்தூர் 4 ரோடு, தெற்கு ஆர்ச். வடக்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், குழுமணி சாலை வழியாக வரும் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன் சாலைரோடு தெற்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரி யின் வலதுபுறம் சிலைகளை கரைத்து செல்ல வேண்டும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சி லஞ்சமேடு வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்கள் பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு மணப்பாறை ஆண்டவர் கோவில், குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்., சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.
கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு குளித்தலை சுங்கேட், முசிறி, பெரம்ப லூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து கரூருக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு. அரி யலூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை வழியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்கு முசிறி பெரியார்பாலம் பூங்கா, பெரம்பலூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லுக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், முசிறி வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதுக்கோட்டை சிப்காட் ரெங்கம்மாள் சத்திரம், தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர் வழி யாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், அரியலூர், திருவையாறு, தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.