வேலூர் பகுதியில், சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

வேலூர் பகுதியில், சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்
Published on

பரமத்திவேலூர்:

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 அடி முதல் 10 அடி உயரம் கெண்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதில் விநாயகர் காமதேனு வாகனத்தில் அமர்ந்துள்ளது போலவும், மயில், சிங்கம், அன்னபட்சி, யானை வாகனங்களில் விநாயகர் அமர்ந்துள்ளது போலவும், சாய்பாபா உருவில் உள்ள விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் சுமார் 110-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com