தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென் மாவட்டத்தில் ரூ.௧௬,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 3,000 முதல் 3,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்பாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com