அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் தரப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை கோர்ட்டை அவமதிக்கும் செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் தரப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
Published on

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த பொதுக்குழுவில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை கோர்ட்டை அவமதிக்கும் செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com