விருதுநகர்: வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் ஒருவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருடைய ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறியதில் 15 ஆடுகள் பலியாகின.

ஆடுகளை கடித்த வெறிநாய்கள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறின.

15 ஆடுகள் பலி

இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மகாலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com