விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Published on

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com