விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த ஒரு கோரமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com