விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர்.
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவர் இன்று உயிரிழந்தார். கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தனர். இதனால், இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com