

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாக கூறப்படும் வழக்கில், 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் முருகன் மற்றும் மருதமலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், இரும்பு குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.