விருதுநகர்: பஸ் விபத்தில் 2 பேர் பலி; 40 பேர் காயம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆறுதல்

திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது.
விருதுநகர்:  பஸ் விபத்தில் 2 பேர் பலி; 40 பேர் காயம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆறுதல்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களில் பலர் சிக்கி அலறினர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com