விருதுநகர்: பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு


விருதுநகர்: பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
x

விருதுநகரில் பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர், மார்க்கண்டன். இவரது மகள் அழகுபாப்பா (19 வயது). இவர் செட்டிக்குறிச்சியில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அழகுபாப்பா, தன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது அங்கு அவரை பாம்பு கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த அழகுபாப்பா சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அழகுபாப்பா கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக மருத்துவர்கள் கூறும்போது, "மாணவியை கண்ணாடி விரியன் அல்லது கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு கடித்திருக்கலாம்," என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story