விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் - திருமாவளவன் பேச்சு

விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என திருமாவளவன் கூறினார்.

விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்
Published on

சென்னை,

விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் என திருமாவளவன் கூறினார்.

உளுந்தூர்பேட்டை மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன்.

விசிக வளர வேண்டும்

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்.

கட்டுக்கடங்காமல் அரங்கத்தில் உள்ள கூட்டத்தைவிடவும் வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் பேச்சின்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு விரைந்து முடிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டு விசிக மாநாடு நிறைவடைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com