

விழுப்புரம்,
விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காக்குப்பம் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்துகொண்ட ஏழுமலையின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.