சிவகிரியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா

சிவகிரியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிவகிரியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா
Published on

சிவகிரியில் சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா, சங்கத்தின் கொடியேற்று விழா, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. பஸ்நிலையம் அருகே உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில பொருளாளர் ஆசிரியர் செண்பகம் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம், வ.உ.சி. படத்தை திறந்து வைத்தார். சங்க பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். செயலாளர் சக்திவேலு வரவேற்றார்.

வ.உ.சி. குறித்த கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com