அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிற்பழகுனர் பயிற்சி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிற்பழகுனர் பயிற்சி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகமும், தென்மண்டல தொழில் பழகுனர் பயிற்சி வாரியமும் இணைந்து ஒருவருட தொழிற்பயிற்சியை நடத்துகிறது. இப்பயிற்சிக்கு பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில் என்ஜினீயரிங்) 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com (News -amp; Events column) என்ற இணையதளத்தை பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 18.12.2022 அன்று கடைசி நாளாகும். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com