பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி

வேப்பூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி
Published on

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி வேப்பூர் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியில் வேப்பூர் குறுவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com