

சென்னை,
இளைஞர்களால் பெரிதும் மதிக்கத்தக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விளங்கி வருபவர் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆவார். தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்த இவர், இதற்கு முன் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது, பணியில் நேர்மையாக செயல்பட்டவர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று சகாயம் ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலர் விவாதம் செய்து வருகின்றனர்.