‘தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ - கனிமொழியை சந்தித்த பிறகு கிரிஷ் சோடங்கர் பேட்டி

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை தி.மு.க.விடம் கூறியுள்ளோம் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
‘தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ - கனிமொழியை சந்தித்த பிறகு கிரிஷ் சோடங்கர் பேட்டி
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தற்போது புதிதாக தே.மு.தி.க.வும் இணைந்து உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. முன்னதாக நேற்று இரவு சென்னை வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தி.மு.க. எம்.பி. கனிமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

“மரியாதை நிமித்தமாக தி.மு.க. எம்.பி. கனிமொழியை சந்தித்தேன். தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை தி.மு.க.விடம் கூறியுள்ளோம். அதிகாரப் பகிர்வை விட தொகுதி பங்கீடு குறித்து முதலில் இறுதி செய்ய வேண்டும். எனவே அது குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றவுடன் அது குறித்து தகவல் தெரிவிப்போம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com