விஜயின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்: அன்புமணி

உங்களது வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு போடுங்கள், உங்களது நோக்கம் வெற்றி பெறும் என அன்புமணி தெரிவித்தார்.
விஜயின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்: அன்புமணி
Published on

சென்னை,

விஜய் அவர்களின் நோக்கமே திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். எங்கள் நோக்கமும் திமுகவை அகற்ற வேண்டும். விஜய் இந்த தேர்தலில் ஓரளவுக்கு வாக்குகளை பெறுவார் ஆனால், வெற்றி பெற முடியாது. அதனால் விஜயின் ஆதரவாளர்கள் உங்களது ஓட்டுக்களை வீணாக்காதீர்கள்.

விஜயின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். எங்கள் வாக்களித்தால் உறுதியாக தி.மு.க தோல்வி அடையும். உங்களின் நோக்கம் திமுக தோற்க வேண்டும் உங்களால் வெற்றி பெற முடியாது. வாக்குகளை பெறுவீர்கள், ஆனால் வெற்றி பெற முடியாது.

அப்போது நீங்கள் உங்களது வாக்குகளை வீணாக்காமல் அண்ணா திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால், உங்களுடைய நோக்கம் என்ன, திமுக அகற்றப்பட வேண்டும் அது நடக்கும். இது எனக்கும் நடந்தது 2016யில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி. அப்போது பிரசாரத்தில் எனக்கு எவ்வளவு ஆதரவு இருந்தது.

அன்றைய சூழ்நிலையில் ஒரு பக்கம் ஜெயலலிதா அம்மையார், ஒரு பக்கம் கலைஞர் நானும் போட்டியிட்டேன் அன்புமணி நல்லவன் நன்றாக பேசுகிறார், அன்புமணியா ஒட்டு வங்குவர் ஆனால் வெற்றி பெறுவது கஷ்டம் என் ஒட்டை வீனாக்க வேண்டும் என்று அண்ணா திமுகவிற்கு வாக்கு அளித்தனர் அதே சூழல் தான் இன்றைக்கும் இருக்கிறது. விஜயின் ரசிகர்களை ஒன்றும் செய்ய முடியாது.

ரசிகர்கள் விஜய்க்கு தான் ஓட்டுப்போட போகிறார்கள். அதனால் விஜயின் ஆதரவாளர்கள் நான் சொல்கிறேன். உங்களது நோக்கம் மற்றும் உங்களுடைய தலைவர் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களது வாக்குகளை வீணாக்காதீர்கள், உங்களது வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு போடுங்கள், அதன் மூலமாக உறுதியாக திமுக ஆட்சி அகற்றப்படும், உங்களது நோக்கம் வெற்றி பெறும் என அன்புமணி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com